பால சர்வீஸ் ரோட்டில் பேவர் பிளாக் சேதம்

விருதுநகர்: விருதுநகர் ராமமூர்த்தி பால சர்வீஸ் ரோட்டில் பேவர் பிளாக் கற்கள் சேதமானதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விருதுநகர் ராமமூர்த்தி ரோடு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு 2019 லோக்சபா தேர்தலின் போது அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது. அப்போதே பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் போட தாமதமானதால் பழைய மேடு, பள்ள ரோட்டில் வாகன ஓட்டிகள் தள்ளாடினர். 2021ல் ரோடுகள் போடப்பட்டது. தற்போது இந்த பேவர் பிளாக் ரோடு சேதமாகி உள்ளது.

தற்போது பழைய பேவர் பிளாக் கற்களை போட்டு நிரப்பி வைத்தாலும், ரோடு மேடு, பள்ளமாகவும், வாகனங்கள் செல்வதற்கு லாயக்கற்றதாகவும் உள்ளது.

டூவீலரில் செல்வோர் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் ராமமூர்த்தி ரோடு சர்வீஸ் பால பணிகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும்.

Advertisement