பாம்பு கடித்து விவசாயி பலி

கமுதி: கமுதி அருகே மீட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி பெத்தம்மாள் 47. வல்லந்தை அருகே சிங் விவசாய தோப்பில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விவசாயி பெத்தம்மாளை பாம்பு கடித்தது. கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதித்த டாக்டர்கள் பெத்தம்மாள் இறந்ததாக கூறினர். மண்டலமாணிக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement