மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்
மதுரை: மதுரை சித்திரை திருவிழா நான்காம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பாவக்காய் மண்டபம் சென்று திரும்பும் நிகழ்ச்சிக்காக நகரில் நாளை (மே 2) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி புறப்பட்டு ஜடாமுனி கோயில் சந்திப்பு, தெற்கு ஆவணி மூல வீதி, மறவர் சாவடி, சின்னக்கடை தெரு, தெற்குமாரட், வடமலையான் சந்திப்பு வழியாக ஜெயவிலாஸ் சந்திப்பு அருகில் உள்ள பாவக்காய் மண்டபம் சென்று அன்று மதியம் 3:00 மணிக்கு திரும்ப அதே வழியாக தெற்குஆவணி மூல வீதி சந்திப்பு வரை சொக்கப்ப நாயக்கர் தெரு, தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதிகள் வழியாக கீழக்கு சித்திரை வீதி வந்து கோயிலுக்கு வந்தடையும்.
சுவாமி பாவக்காய் மண்டபம் சென்று கோயிலுக்கு திரும்பும் வரை தெற்கு ஆவணி மூல வீதி - தொட்டியன் கிணற்று சந்திப்பு முதல் ஜடாமுனி கோயில் சந்திப்பு வரை மற்றும் மற்றும் சொக்கப்ப நாயக்கர் தெரு, சின்னக்கடை வீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.
பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் போது அவனியாபுரத்தில் இருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள் ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் லிட்டில் டைமண்ட் பள்ளி வழியாக ஜெய்ஹிந்த்புரம் ரோடு சென்று ஜீவா நகர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
சுவாமி தெற்குவாசல் சந்திப்பை கடந்து பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் வரை ஜெய்ஹிந்த்புரம் ரோடு வழியாக ஜெயவிலாஸ் சந்திப்பு நோக்கி செல்ல அனுமதியில்லை.
சிந்தாமணி, கீரைத்துறை வழியாக என்.எம்.ஆர்., பாலம் பக்கவாட்டு ரோட்டில், ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்களுக்கு அனுமதியில்லை.
இந்த வாகனஙகள் கீரைத்துறை சந்திப்பில் திரும்பி பழைய குயவர்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.
தெற்குவாசல் சந்திப்பில் இருந்து என்.எம்.ஆர்., பாலம் வழியாக ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி வாகனங்களுக்கு அனுமதியில்லை. இருசக்கர வாகனம், இலகுரக வாகனங்கள் மீனாட்சி தியேட்டர் பள்ளம் வழியாக ஜெய்ஹிந்த்புரம், ஹவுசிங் போர்டு காலனி வழியாக வில்லாபுரம் செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் அழகப்பன் நகர் ரயில்வே கேட், முத்துப்பட்டி ரோடு, அவனியாபுரம் வழியாக அருப்புக்கோட்டை செல்லலாம்.
அவனியாபுரம் ரோட்டில் இருந்து வரக்கூடிய மக்கள் லிட்டில் டைமன்ட் பள்ளி சந்திப்பு முதல் வில்லாபுரம் வரை ரோட்டோரமாக நிறுத்திக்கொள்ளலாம். தெற்கு வெளிவீதி வழியாக வருவோர் ஜெய்ஹிந்த்புரம் ரோட்டோரமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு