சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது 

கடலுார் : கடலுார் முதுநகர் சாராய வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார், முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முதுநகர் புஷ்பராஜ், 45; என்பவர் மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்து கைது செய்தனர்.

அவர் மீது, ஏற்கனவே முதுநகர் போலீசில் 2 சாராய வழக்குகள், மதுவிலக்கு பிரிவில் ஒரு சாராய வழக்கு என மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்றசெயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், பரிந்துரையின்பேரில் கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, புஷ்பராஜ் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

Advertisement