அந்த ஒரு சிக்ஸர் போதுமா?

சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நேற்றும் வீணாகிப்போனது

ஆனால் இது மோசமான தோல்வி என்று சொல்லமுடியாது,ஜெயித்துவிடுவார்கள் என்று நம்பக்கூடிய ஸ்கோர்தான் இருந்தது,இருந்தும் கடைசியில் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழ்நிலை.

விதிகளின்படி இனி இந்த வருட சாம்பியன் ஆவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று.
Latest Tamil News
தோனி மீதான பிரியம் ரசிகர்களிடம் கொஞ்சம் கூட குறையவில்லை மைதானத்தில் பலரும் ஏழாம் எண் மஞ்சள் பனியனுடன் தோனி விளயைாட வரும்போது நகம்கடித்தபடி காத்திருந்தனர்.
Latest Tamil News
ஒரு சிக்ஸர் அடித்ததும் பார்த்தியா தோனி அடிக்க ஆரம்பிச்சுட்டாரு என்று கத்தி விசிலடித்து எழுப்பிய உற்சாகம் அடங்குவதற்குள் அடுத்த பந்தை கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

இடைவேளையின் போது டிராகன் உருவ பொம்மையுடன் சிலர் மைதானத்தில் இறங்கினார் ஏதோ சுவராசியமாக செய்யப்போகின்றனர் என்று எதிர்பார்த்தால் சின்னதாய் ஒரு ஒட்டம் ஒடிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர்.

சென்னை அணிக்காக கார்ன்ஸ் அடி அடி என்று அடித்த ஆட்டம் வீணாகிப்போனது.
Latest Tamil News
ஆட்ட முடிவில் தோனியிடம் மைக்கை நீட்டிய அறிவிப்பாளர் உங்களுக்கான வரவேற்பை பார்த்தீர்களா அடுத்த வருடம் அவசியம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவீர்கள்தானே என்று கேட்டபோது அடுத்தபோட்டியில் நான் இருப்பேனா என்பதே சந்தேகம் நீங்கள் அடுத் ஆண்டுக்கு போய்விட்டீர்கள் என்று தத்துவம் பேசினார்.

அந்த ஒரு சிக்ஸர் போதுமா?

சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை, நேற்று இரவு இன்னொரு முறை வீணானது. வெற்றி நிச்சயம் என்று எதிர்பார்க்கவைத்த ஒரு ஸ்கோர் இருந்த போதும், கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழ்நிலை வந்தது.

இது ஒரு மோசமான தோல்வி அல்ல; ஆனால் மிக அருமையான வாய்ப்பு தவறியதை மறுக்க முடியாது. “இந்த வருடம் சாம்பியன் ஆவதற்கான வாய்ப்பு இத்துடன் முடிந்தது” என்கிறது கிரிக்கெட் விதிகளின் அடிப்படை.

இந்நிலையில், தோனியிடம் ரசிகர் காட்டும் பாசம் மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை. மைதானத்தில் ஏழாம் எண் மஞ்சள் பனியன் அணிந்து, தோனி களத்திற்கு வரும்போதெல்லாம் விசிலடித்து வரவற்றனர்..

அவர் ஒரு பந்தில் சிக்சர் அடித்ததும் “பார்த்தியா… தோனி அடிக்க ஆரம்பிச்சுட்டாரு!” என ரசிகர்கள் கத்தி, விசில் அடித்து வெளிப்படுத்திய உற்சாகம் அடங்குவதற்குள் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இடைவேளையின் போது சிலர் டிராகன் உருவ பொம்மையுடன் மைதானத்தில் இறங்கியபோது, ஏதாவது வித்தியாசமானதை காணப்போகிறோமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது , ஆனால் அவர்கள் ஓர் குறு ஒட்டம் ஓடிவிட்டு ஒதுங்கி எங்க எண்டர்டெய்ன்மெண்ட் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு ஒதுங்கினர்.

கார்ன்ஸ் வீரர் அடி அடி என்று அடித்து சேர்த்த அபார ஸ்கோர் எல்லாம் கடைசியில் வீணாகி விட்டன.

ஆட்ட முடிவில், தோனியிடம் மைக்கை நீட்டிய அறிவிப்பாளர், “உங்களுக்கான வரவேற்பை பார்த்தீர்களா? அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவீர்கள்தானே?” எனக் கேட்டபோது,
தோனி சற்று புன்னகையுடன், “அடுத்த போட்டியில் நான் இருப்பேனா என்பதே சந்தேகம்... நீங்கள் அடுக் ஆண்டுக்கு போயிட்டீர்கள்!” என தத்துவமாய்ப் பதிலளித்தார்.

Advertisement