' வாகனத்தை பின் தொடராதீர்கள்': ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

சென்னை: '' மதுரையில் ரசிகர்கள் யாரும் எனது வாகனத்தை பின் தொடர வேண்டாம்,'' என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் கூறியுள்ளார்.
கொடைக்கானலில் நடக்கும் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் மதுரைக்கு விமானத்தில் சென்று, கொடைக்கானலுக்கு காரில் செல்ல உள்ளார். இதனையறிந்த ஏராளமான ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் கூடி உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். த.வெ.க., கட்சி துவக்கிய பிறகு விஜய் நிருபர்களை சந்திப்பது இது முதல் முறையாகும்.
அப்போது விஜய் கூறியதாவது: மதுரை மக்களுக்கு என்னுடைய வணக்கம். எனது வேலைக்காக நான் செல்கிறேன். ஜனநாயகன் படப்பிடிப்புக்காக நான் செல்கிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணில், கட்சி சார்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன். ஒரு மணி நேரத்தில் நான் என் வேலையை பார்க்க போகிறேன். நீங்களும் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்.
மதுரையில் என்னுடைய வேன், கார் பின்னாடி யாரும் பின் தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவது, ஹெல்மெட் இல்லாமல் செல்வது, டூவீலர் மேல் நின்று பயணிப்பது போன்று வராதீர்கள். இதனை பார்ப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. மதுரை விமான நிலையத்தில் இதனை சொல்ல முடியாது. சூழ்நிலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. இவ்வாறு விஜய் கூறினார்.
மதுரையில் வரவேற்பு
மதுரை சென்ற நடிகர் விஜய்க்கு, விமான நிலையத்தில் இருந்து திறந்த வேனில் வந்தார். அவர் மீது தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்றபடி சென்றார்.
சொல் பேச்சு கேட்காத ரசிகர்கள்
விஜய்யின் வருகையின் போது, மதுரை விமான நிலையத்தில் குவிந்த த.வெ.க.,வினர் மற்றும் ரசிகர்கள் தடுப்புகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. மேலும், விஜய்யின் வேண்டுகோளை நிராகரித்து, கொடைக்கானல் செல்லும் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.
வாசகர் கருத்து (1)
HoneyBee - Chittoir,இந்தியா
01 மே,2025 - 16:00 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஒருத்தரையும் விட மாட்டோம்; தக்க பதிலடி கொடுப்போம்; அமித் ஷா சூளுரை
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவு: ராஜ்நாத்திடம் அமெரிக்கா உறுதி
-
ஜிஎஸ்டி வசூலில் புது உச்சம்: ஏப்., மாதம் ரூ.2.36 லட்சம் கோடி வசூல்
-
வாக்காளர் பட்டியலுடன் இறப்பு பதிவுகள் இணைப்பு; தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்
-
பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
-
பரமக்குடியில் வயதான கணவன், மனைவி வீட்டில் தற்கொலை; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
Advertisement
Advertisement