இந்தியாவுக்கு ஆயுத தளவாடங்கள் விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

2


வாஷிங்டன்: இந்தியாவுக்கு 11 ஆயிரம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.


அதிபராக பதவியேற்றதில் இருந்து டிரம்ப், அமெரிக்காவிடமிருந்து ராணுவ கொள்முதலை அதிகரிக்கும்படி இந்தியாவை வலியுறுத்தி வருகிறார்.


இந்த நிலையில், இந்தியாவிற்கு 11,083 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது. பெண்டகனின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு(DSCA) தளவாடங்கள் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியதுடன், அது குறித்து அந்நாட்டு பார்லிமென்டில் தெரிவித்து உள்ளது. sea-vision software, remote software, analytic support மற்றும் அதுசார்ந்த தளவாடங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்பு கொண்டு உள்ளது.


இந்த தளவாடங்களினால், இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் அச்சறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த தளவாடங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.

Advertisement