பொற்பந்தல் குளம் சீரமைக்க கிராமவாசிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில், பொது குளம் உள்ளது. இந்த குளம் கிராமத்தின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இக்குளத்து தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், பாசி படர்ந்து, செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், மழை நேரங்களில் குளத்தில் போதிய அளவு தண்ணீர் சேகரமாக முடியாத நிலை உள்ளது.
தற்போது, கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில், மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லப்படும் கால்நடைகள், இந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்கவருகின்றன.
அப்போது, குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளதால், கால்நடைகள் குளத்தில் இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, பொற்பந்தல்பொது குளத்தை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
-
இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை
-
பல்லடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
-
காஷ்மீர் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்