சேலையால் வேலி அமைத்து விவசாயிகள் பயிர் பாதுகாப்பு



பாப்பிரெட்டிப்பட்டிபாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் நோக்கில் விவசாயிகள் வயலை சுற்றி சேலையால் வேலி அமைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவரமலை காட்டு பகுதியில் தென்கரை கோட்டை, பூதநத்தம், பாஞ்சாலி நகர், உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.


இப்பகுதிகளில் கடந்த, மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த மழையாலும், வாணியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளதால், நல்ல விளைச்சல் கண்டுள்ளன.
இப்பகுதியில் விவசாயிகள், 1.50 லட்சம் ஏக்கர் வரை நெல் நடவு செய்துள்ளனர். வாழை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். இதை வனத்திலிருந்து வரும் காட்டுப்பன்றிகள், மான், மயில் உள்ளிட்டவை தின்று நாசம் செய்து வருகின்றன.
அவற்றிடமிருந்து பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் வயலை சுற்றி, சேலையை வேலியாக அமைத்து, பயிர்களை காத்து வருகின்றனர்.
தொடர்ந்து வன விலங்குகளால், பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement