கோ.மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கோ.மங்கலம் ஊராட்சியில் மே தினத்யொட்டி கிராம சபைக் கூட்டம் நடந்தது.

பி.டி.ஓ., ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய பணிகள், கலெக்டர் வழங்கிய பணிகளில் ஆட்சேபனை, பிரச்னைகள் குறித்து விவாதிக்கப் பட்டது.

இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வேலை அடையாள அட்டை, புதிய பணியாளர்களிடம் படிவம் 6 பெறுதல், நுாறு நாள் திட்டப் பணியாளர்கள் 6 முதல் 8 மணி நேரமாக உழைப்பை வழங்கிட வலியுறுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன

கோவிலானுார் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, பி.டி.ஓ., சங்கர் தலைமை தாங்கினார். இதேப் போன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடந்தது.

Advertisement