தமிழில் பெயர் பலகைஆலோசனை கூட்டம்
அரூர்அரூரில் வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், டவுன் பஞ்., அலுவலகத்தில் நேற்று நடந்தது. டவுன் பஞ்., செயல் அலுவலர் (பொறுப்பு) நாகராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் வரும், 15ம் தேதிக்குள் தமிழில் பெரிய எழுத்துக்களில் பெயர் பலகைகள் மாற்ற வேண்டும். இது குறித்து வணிக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த துண்டு பிரசுரம் வழங்கப்படும். தமிழில் பெயர் பலகை வைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில், அரூர் அனைத்து வணிகர் சங்கத்தலைவர் சின்னசாமி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement