விளம்பர போர்டு அகற்றம்

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. இளைஞர்கள் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் திருவெற்றியூர் தான் எங்க அடையாளம். ஆனா நாங்க தான் திருவெற்றியூருக்கே அடையாளம் என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து ஹலோ போலீசுக்கு சிலர் தெரிவித்தனர். போலீசார் போர்டை அகற்றுமாறு வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து போர்டு அகற்றப்பட்டது.

Advertisement