ஆண்டு விழா 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். முதல்வர் பெரியசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினர் இன்னோவேட்டிவ் குரூப்ஸ் நிறுவனர் வெங்கடேஷ் பேசுகையில், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் நேர மேலாண்மை அவசியம் என்றார்.

விளையாட்டுத் துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியை கண்மணி நன்றி கூறினார்.

Advertisement