மே தினவிழா  ஊர்வலம் - பொதுக்கூட்டம்

ராமநாதபுரம்: மே தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு, இணைந்து நகரில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் அருகே மே தினம் ஊர்வலம் தொடங்கியது. மாவட்ட தலைவர்கள் ஏ.ஐ.டி.யு.சி., ராதா, சி.ஐ.டியு., சந்தானம் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி., ராஜன், சி.ஐ.டியு., சிவாஜி முன்னிலை வகித்தனர்.

செங்கொடி ஏந்தியவாறு வண்டிக்காரத்தெரு, சாலைத்தெரு, அக்ரஹார தெரு, தலைமை தபால்நிலையம் ரோடு வழியாக அரண்மனை வரை ஊர்வலமாக வந்தனர். அதன் பின் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கட்டட தொழிலாளர் சங்கம் மாநில பொதுசெயலாளர் செல்வராஜ் மற்றும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement