டிராக்டர் ஏற்றி பெண்ணை கொல்ல முயற்சி

சென்னிமலை:
சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, பொன் சடச்சி அம்மன் கோவில் பக்கத்தில் உள்ள தோட்டத்திற்கு அருகில், புறம்போக்கு நிலத்தில் முருங்கத்தொழுவு, சூலைப்புதுார் பகுதியில் வசிக்கும் தங்கவேல், 65, என்பவர் தனது டிராக்டரில் மண் எடுத்து அவரது தோட்டத்திற்கு போட்டுள்ளார். மண் எடுப்பதை பார்த்த, அருகில் தோட்டம் வைத்துள்ள சேமலைபாளையம், வாய்க்கால்மேடு ஜோதிலட்சுமி, 46, என்பவர் தகராறு செய்து டிராக்டரை நிறுத்த பார்த்துள்ளார்.
அப்போது தங்கவேல், ஜோதிலட்சுமி மீது மோதும்படி டிராக்டரை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து ஜோதி லட்சுமி கொடுத்த புகார்படி, சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை ஜோதிலட்சுமி உறவினர்கள், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி வைரலாக்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement