'புதிய கல்வி கொள்கையால் இடைநிற்றல் அதிகமாகும்'

14

திருச்சி:

திருச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், எப்போது நடத்துவர் என தெரிவிக்கவில்லை. இதை அறிவிப்போடு நிறுத்தக் கூடாது; செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை, மொழி சார்ந்தது. அது சம்பந்தமாகவே அதில் பல்வேறு ஷரத்துக்கள் உள்ளன. இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், தமிழகத்தில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகும்.

எதை வைத்து அதைச் சொல்கிறோம் என்றால், புதிய கல்விக் கொள்கையில், 3, 5, 8 வகுப்புகளுக்கு தேர்வு வைப்பதாகச் சொல்லி உள்ளனர். அதனால், குழந்தைகள் இடைநிற்றல் கண்டிப்பாக அதிகமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement