தொழிலாளர் தின விழா: தி.மு.க., நலத்திட்ட உதவி

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் தொழிலாளர் தின விழாவையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, தொழிற் சங்க கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, 500 தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை, கைலி, துண்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார்.

தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், நகர செயலாளர் சக்கரை, மாவட்ட விவசாய அணி கேசவன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், கவுன்சிலர்கள் மணவாளன், மணி, சாந்தராஜ், ஜனனி தங்கம்.

நிர்வாகிகள் முத்துசாமி, பன்னீர்செல்வம், வெங்கடேசன், தொ.மு.ச., தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் காசிநாதன், துணைத் தலைவர் லட்சுமிபதி, சேகர், செல்லதுரை, முகமதுஅலி, பழனியப்பன் மற்றும் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement