என்.ஆர் காங்., எஸ்.சி.,எஸ்.டி., அணி நிர்வாகி நியமனம்

புதுச்சேரி: அகில இந்திய என்.ஆர் காங்., கட்சியின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அணி தலைவராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி முதல்வரும் என் ஆர் காங்., தலைவருமான ரங்கசாமியின், ஒப்புதல்படி மாநில செயலாளர் ஜெயபால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.அதன்படி கட்சியின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அணி தலைவராக அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே புதுச்சேரி மாநில அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்மட்டக் குழு உறுப்பினராகவும், மத்திய அரசு சார்பில் தொலைத் தொடர்பு, துறை ரயில்வே துறை, பெர்டிலைசர் துறை மற்றும் மினிஸ்ட்ரி ஆப் மைன்ஸ் துறை ஆகியவையின் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement