விழுப்புரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

வானுார்: கிளியனுாரில் மே தின கிராம சபைக் கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் நாகம்மாள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் சக்கரபாணி எம்.எல்.ஏ., பேசினார். ஒன்றிய கவுன்சிலர் பாலு, ஊராட்சி துணைத் தலைவர் தெய்வஜோதி முன்னிலை வகித்தனர்.
குற்ற புலனாய்வு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலு, தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஞ்சீவி, வார்டு உறுப்பினர்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறையினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொகுப்பு வீடுகள் வழங்குதல், சாலை வசதி ஏற்படுத்தி தருதல், குடிநீர் வசதி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
செஞ்சி
பொன்பத்தி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அனுசுயா மணிபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட ஊராட்சிகள் செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார்.
ஊராட்சி செயலாளர் பழனி தீர்மானங்களை வாசித்தார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் துரை, மருத்துவ அலுவலர் முகிலன் மற்றும் கிராம பொது மக்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம்
கோலியனுார் அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் நாகஜோதிபானு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பி.டி.ஓ.,க்கள் தேவதாஸ், கார்த்திகேயன், உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகேவல், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்செல்வி கேசவன், வனிதா அரிராமன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். கவுன்சிலர் அமுதா கணேசன், தி.மு.க., மாவட்ட பொறியாளர் அணி புகழ் செல்வகுமார், சுதேசி ராஜா, கண்ணன், சம்பத், ஊராட்சி துணைத் தலைவர் உஷா, தொழிலாளர் அணி முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம்
சலவாதியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். துணை தலைவர் சரண்யா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் கிராம மக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். தொடர்ந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். சென்னை சாலையில் சலவாதியில் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைப்பது குறித்து நகாய் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி, மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவிசேரன், தாசில்தார் யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
வேம்பியில் நடந்த கூட்டத்திற்கு , ஊராட்சி தலைவர் தனலட்சுமி ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் வாசுதேவன் தீர்மானங்களை படித்தார். அன்னியூர் எம்.எல்.ஏ., மனுக்களை பெற்று, திட்டங்கள் குறித்து பேசினார்.
பி.டி.ஓ., சையது முகமது, டாக்டர்கள் தர்ம குமரன், கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் சுந்தரேசன், வள்ளி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெய்சன், ஒன்றிய பொறியாளர் முருகன், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஊராட்சி துணை தலைவர் சரவணன்.
மாவட்ட வேளாண் விற்பனை குழு முருகன், கல்விக் குழு சீனிவாசன், விநாயகமூர்த்தி, கணேசன், விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சதீஷ், கில்பர்ட்ராஜ், வெற்றிவேல், கிளை செயலாளர்கள் குமார், ராஜசேகர், வேணுகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு