தொழிலாளர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

திருத்தணி:திருத்தணி தணிகை இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் ஆண்டுதோறும்,மே 1 தொழிலாளர் தினத்தன்று சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த படுகிறது.
நேற்று தொழிலாளர் தினம் ஒட்டி, 100க்கும் மேற்பட்டோர் திருத்தணி பைபாஸ் சாலையில், இருந்து புதிய சென்னை சாலை, சித்துார் சாலை, ம.பொ.சி. சாலை மற்றும் அரக்கோணம் சாலை வழியாக கமலா தியேட்டர் வரை இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.
திருவள்ளூர் மக்கள் நீதிமன்ற உறுப்பினர் லோகமணி துவக்கி வைத்தார். ஊர்வலத்தின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மேட் அணிந்து, சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என, துண்டு பிரசுரம் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையை போல சாதித்த தனயன்
-
காது கேளாதோர் தேசிய 'டி - 20' கோப்பையை தட்டி துாக்கிய கர்நாடக அணி
-
காணாமல் போன 'ஈ சாலா கப் நம்தே' கோஷம்
-
மைசூரில் ஹைடெக் கிரிக்கெட் ஸ்டேடியம்
-
ஹூப்பள்ளி என்கவுன்டரில் மனித உரிமை மீறல் தலைமை செயலர், டி.ஜி.பி.,க்கு ஆணையம் நோட்டீஸ்
-
12,692 துாய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொழிலாளர் தின பரிசு வழங்கிய காங்., அரசு
Advertisement
Advertisement