தந்தையை போல சாதித்த தனயன்

இயற்கையான உணவு வகைகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தாலே சாதிக்கலாம் என்பதை, தந்தையை போன்று ஆணழகன் போட்டியில் பங்கேற்று, நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் பெருமை சேர்த்தவர் சோதன் ராய்.
ஆணழகன் போட்டியில் பல்வேறு புரோட்டீன்கள் சேர்த்து, உடலை வளர்த்து கொள்வர். ஆனால், பெங்களூரை சேர்ந்தவர் சோதன் ராய், தன் தந்தை ஜே.என்.ராயை போன்று இயற்கை உணவு வகைகளை மட்டுமே எடுத்து கொண்டார்.
உலகம் முழுதும் நடந்த பல்வேறு சர்வதேச இயற்கை ஆணழகன் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பதக்கங்கள் வாங்கி, நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் பெருமை சேர்த்து உள்ளார். இவரின் பணியை பாராட்டி, 2014ல் கர்நாடக அரசு, 'ஏகலைவா விருது' வழங்கி கவுரவித்து உள்ளது.
இயற்கை உணவு சாப்பிட்டு, வெற்றி பெற்றது குறித்து, சோதன் ராய் கூறியதாவது:
என் தந்தையை 30 ஆண்டுகளாக பார்த்து ஆணழகன் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் தந்தையும் நாட்டுக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் பெற்றுள்ளார்.
சரியான நேரத்தில் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தாலே போதும். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நானும், என் தம்பியும் இச்சூழ்நிலையில் தான் வளர்ந்தோம்.
தந்தையை போன்று, நாட்டுக்காக ஆணழகன் போட்டியில் பங்கேற்று, விருது பெற வேண்டும் என்று பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே கனவு கண்டு வந்தேன்.
நீங்கள் ஆரம்பம் முதலே இயற்கை உணவு வகைகளையே சாப்பிட்டு வந்தாலே போதும். உடல் எடை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்ற வகையில் ஊட்டச்சத்து, புரதத்தை சரிசமமாக உட்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஆணழகன் போட்டியில் பங்கேற்கிறீர்கள் என்றால், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம், எந்த உணவு சாப்பிடக்கூடாது என்ற வழிகாட்டுதலை வழங்கும்.
ஆணழகன் போட்டியில் நான் பங்கேற்பதாக இருந்தால், தினமும் காலை 6:30 மணிக்கு என் பணி துவங்கும். புரதச்சத்து உள்ள உணவு சாப்பிடுவேன். ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் எனது உணவை திட்டமிடுவேன்.
காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை நான்கு முதல் ஐந்து மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். சிறிது நேரம் ஓய்வெடுப்பேன்; மீண்டும் உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். அதன்பின், அடுத்த நாளுக்கான புரத சத்து உணவை தயாரிப்பேன். பின் மீண்டும் மதியம் 3:30 மணிக்கு என் பணியை தொடருவேன்.
மற்ற நேரங்களில் உணவு கட்டுப்பாட்டில் தளர்வை ஏற்படுத்தி, ரெஸ்டாரென்ட்களுக்கு சென்று, விதவிதமான உணவு வகைகளை ருசி பார்ப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு