காணாமல் போன 'ஈ சாலா கப் நம்தே' கோஷம்
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும், ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. லீக் போட்டிகள் முடியும் தருவாயில் உள்ளன. அடுத்து பிளே ஆப், பைனல் தான்.
இதுவரை நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதுவரை ஒரு முறை கோப்பை வென்றது இல்லை. இத்தனைக்கும் அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் உள்ளிட்டோர் விளையாடி இருக்கின்றனர்.
கேலி, கிண்டல்
ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல்., துவங்கும் முன்பு, 'ஈ சாலா கப் நம்தே' என்று ஆர்.சி.பி., ரசிகர்கள் கூறுவதும், ஆனால் கோப்பையை வெல்ல முடியாமல் மற்ற அணி ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகுவதும் நடக்கிறது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஆர்.சி.பி., சிறப்பாக விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது.
இதனால் ரசிகர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் 'ஈ சாலா கப் நம்தே' என்ற கோஷம், இம்முறை ரசிகர்கள் வாயில் இருந்து வரவே இல்லை. ஒவ்வொரு முறையும் அப்படி கோஷம் போடுவதால் தான், கோப்பை கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் உணர்ந்து விட்டனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவும், 'ஈ சாலா கப் நம்தே' என்று தயவு செய்து சொல்லாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நண்பர் இல்லை
கடந்த சில ஆண்டுகளாக, கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களை ஒட்டி நடக்கும் தேரோட்டத்தில், வாழைப்பழத்தில் ஐ.பி.எல்., போட்டியில் பெங்களூரு கோப்பை வெல்ல வேண்டும் என்று எழுதி, தேர் மீது வீசப்பட்டது வந்தது. ஆனால், இம்முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை. ரசிகர்கள் அடக்கி வாசிக்கின்றனர். ஒருவேளை இம்முறை ஆர்.சி.பி., அணி கோப்பையை கைப்பற்றி விட்டால், அதன்பின் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு வேற வெலலில் இருக்கும்.
இதற்கிடையில் ஆர்.சி.பி., அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும், கேப்டன் ரஜத் படிதார், விராட் கோலி இடையில் உரசல் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. வீரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் விளையாட வேண்டும். கப் முக்கியம் பிகிலு என்று, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ஆர்.சி.பி., அணிக்காக துவக்க வீரராக விளையாடும், இங்கிலாந்தின் பில் சால்ட் ஒரு பேட்டியில், விராட் கோலி எனது அணி வீரர். நண்பர் இல்லை என்று கூறி இருக்கிறார். இது ஆர்.சி.பி., ரசிகர்களை வேதனை அடைய செய்து உள்ளது.
நாட்டிற்காக விளையாடும் போது வேறு அணி வீரர்களுடன் மோதினாலும், ஐ.பி.எல்., போட்டியில் ஆர்.சி.பி., அணிக்காக விளையாடும், வெளிநாட்டு வீரர்களுடன் நட்பு பாராட்டுவதில் விராட் கோலி சிறந்தவர் என்றும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்
- நமது நிருபர் -.
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை