மைசூரில் ஹைடெக் கிரிக்கெட் ஸ்டேடியம்

அரண்மனை நகரமான மைசூரில், சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமையும் காலம் கூடி வந்துள்ளது. இதற்கு தேவையான நிலம் வழங்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகாவின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது மைசூரு. இந்த நகரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்த வசதியாக, தரமான விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பது, விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையாகும். இவர்களின் வேண்டுகோள் நிறைவேறுவதற்கான காலம் கூடி வந்துள்ளது.
ஏரி நடுவில்
மைசூரில் சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் கட்ட, மாவட்ட நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது. இதற்கு முன் மைசூரு நகரின், வெளி வட்ட சாலையை ஒட்டியுள்ள ஹன்சியா - சாதகள்ளி அருகில், 20 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. இந்த இடம் ஏரிக்கு நடுவில் உள்ளது. எனவே, அந்த இடம் முடிவாகவில்லை.
அதன்பின் பல இடங்களில் தேடி, இறுதியாக மைசூரு நகரின், ஹுயிலாளு அருகில் நிலம் தேர்வு செய்தனர். இந்த இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சில நடைமுறைகளை முடித்த பின், இந்த நிலம் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனிடம் ஒப்படைக்கப்படும். இங்கு 100 கோடி ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
கிரிக்கெட் போட்டிகள்
தற்போது மானசகங்கோத்ரி வளாகத்தில் உள்ள, ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் விளையாட்டு அரங்கில், கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தேசிய அளவிலான போட்டிகளும் இங்கு நடக்கின்றன. இந்த விளையாட்டு அரங்கம் சிறியது. இதனை விஸ்தரிக்க இட வசதியும் இல்லை. எனவே சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்த முடியவில்லை.
சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கு அமைந்தால், மைசூரு விளையாட்டிலும், உலக அளவில் பிரசித்தி பெறும். விளையாட்டுக்கு ஊக்கம் கிடைக்கும். திறமையாளர்களை உருவாக்க உதவியாக இருக்கும்.
- நமது நிருபர் -
மேலும்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி