புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்த பேனர்கள்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில், பள்ளிப்பட்டு, சோளிங்கர், திருத்தணி சாலைகள் இணையும் முச்சந்தியில் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.

புறக்காவல் நிலைய சுற்றுச்சுவரில், ஏராளமான துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால், புறக்காவல் நிலையம் பொலிவிழந்து காணப்படுகிறது.

மேலும், இந்த வளாகத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் பிரம்மாண்டமான வழிகாட்டி பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி, வாகன ஓட்டிகளுக்கு பெரிதம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த வழிகாட்டி பதாகையின் கம்பத்தில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் விளம்பர பதாகைகளை தொங்க விட்டு வருகின்றன.

புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement