மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
குறிஞ்சிப்பாடி: மதுபாட்டில்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர்கள் டைமன் துரை, ஜெயதேவி ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆடூர் அகரத்தில் வீடு ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்,28; விழுப்புரம் அடுத்த கீழ்பாதியைச் சேர்ந்த ராஜி, 32; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல, கஞ்சமநாதன்பேட்டையில் மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்,57; என்பவரையும் போலீசார் கைது செய்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement