கொடி கம்பங்கள் அகற்ற பேரூராட்சி நோட்டீஸ்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென, பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சியின் கொடி கம்பங்களை அகற்ற மதுரை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்பேரில், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென, அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நோட்டீசில் 'சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள், கட்டுமானம் உட்பட அனைத்தையும் சம்பந்தப்பட்ட கட்சியினர் உடனடியாக அகற்ற வேண்டும்.

தவறும் பட்சத்தில், பேரூராட்சி மூலமாக கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்படும். மேலும், அதற்கான செலவு தொகையை சம்மந்தப்பட்ட கட்சியினரிடம் இருந்து வசூலிக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement