கடந்தாண்டை விட முந்திரி விலை உயர்வு: பருவம் தவறிய மழையால் விளைச்சல் குறைவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பருவம் தவறிபெய்த மழையால் முந்திரி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாககடந்த ஆண்டை விட இந்தாண்டுவிலை உயர்ந்துள்ளது.


கடலுார் மாவட்டத்தில் செம்மண் பூமியில் முந்திரி அதிகளவில் விளைகிறது. இது நிலத்தடி நீர் இல்லாத செம்மண் பகுதியில் மக்களுக்கு ஒரு சிறந்த வருவாயை கொடுக்க வல்லது. கடந்த 2011ம் ஆண்டு வீசிய 'தானே' புயல் காரணமாக முந்திரி மரங்கள் அடியோடு அழிந்தன.
அதன் பின்னர் அரசு முயற்சியாலும், விவசாயிகளின் தொடர் முயற்சியாலும் தற்போது மீண்டும் முந்திரி மரக்கன்றுகள் வைத்து உருவாக்கப்பட்டன. முந்திரிக் கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்க்க வேறு உணவுகளுடன் சேர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அபார ரூசியால் 'இதை கப்பல் வித்தான் கொட்டை' என்றும் கூறுவர்.

வணிகத்திற்காக வந்த பிற நாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப்பட்டு கப்பலை விற்று இதை உண்டதாக கூறுவர். முந்திரியின் விதைதான் பொது வழக்கில் முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் 10 லட்சம் ஏக்கரில் முந்திரி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

பண்ருட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கரில் முந்திரி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதத்தில் முந்திரியில் பூ பூக்கும் தருனமாக இருந்தது. திடீரென கடலுார் மாவட்டத்தில் கனமழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் பூக்கள் முழுக்க கருகியது. பிஞ்சு பிடிக்காமல் ஒட்டு மொத்தமாக கருகியது.

விவசாயிகள் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகளை செய்தும் பலனளிக்கவில்லை. அதனால் முந்திரி விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது. அதனால் அது தொடர்பாக நடைபெறும் தொழில்களிலும் பாதிப்பு ஏற்பட்டு, முந்திரி இறக்குமதி கூடுதலானது.

இந்தோனேஷியா, நைஜீரியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து முந்திரி கப்பல் மூலம் இறக்குதி செய்து துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அவ்வாறு முந்திரி கொட்டைகளை மூட்டைகளாக வாங்கி அதை நீராவியால் அவித்து பின்னர் ஓடு வேறாகவும், பருப்பு வேறாகவும் பிரித்தெடுக் கப்பட்டு முழு பருப்பு வேறாகவும், உடைந்த பாதி பருப்பு வேறாகவும், ஒரு கிலோ, அரை கிலோவாக பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படு கிறது.

இந்தாண்டு முந்திரி விளைச்சல் குறைவால் கடந்தாண்டு ஒரு கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மூன்றாவது ரக முந்திரி 850 ரூபாய்க்கும், கிலோ 800 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட இரண்டாவது ரக இரண்டாவது 950 ரூபாய்க்கும், 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மூன்றாவது ரக முந்திரி 1,000 ரூபாய்க்கும் தற்போது, விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் விளையும் முந்திரி பருப்புகளுக்கு வடநாட்டில் தனி மவுசு உண்டு, இனிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பில் முந்திரி பயன்படுத்தப்படுவதால் விலை குறையாமல் அதிகரித்து வருகிறது.

வரும் ஆண்டில் சிறந்த விளைச்சல் ஏற்பட்டால் விலை குறையும் என்கின்றனர் வியாபாரிகள்.

Advertisement