விமான தாக்குதல் பயத்தில் வான்வெளியை மூட பாகிஸ்தான் முடிவு

இஸ்லாமாபாத் : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானின் உளவுத்துறை உதவியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், பாகிஸ்தானில் கராச்சி மற்றும் லாகூர் வான்வெளித் தடங்கள் நாள்தோறும் நான்கு மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாக்., அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பாதுகாப்பு காரணங்களுக்காக நாள்தோறும் காலை 4:00 மணி முதல், 8:00 மணி வரை கராச்சி, லாகூர் வான்வெளி தடங்கள் மூடப்படும். இந்த நேரத்தில் வரும் விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் உள்ள ஜின்னா மற்றும் லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் முழுதும் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


மேலும்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்