பீச்சில் மணல் சிற்பம் மாணவர்கள் அசத்தல்

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில், ஏ.ஆர்.எல்.எம்.,வித்யாலயம் பள்ளி மாணவர்கள், தொழிலாளர் தினத்தையொட்டி மணல் சிற்பம் அமைத்தனர்.

கடலுார் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி, தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு, நெகிழ்வு மற்றும் கண்ணியத்தைக் கொண்டாடும் வகையில், சில்வர் பீச்சில் மணல் சிற்பக் காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணல் சிற்பத்தை மாணவர்கள் வடிவமைத்தனர். ஏ.ஆர்.எல்.எம்.,வித்யாலயம் பள்ளி செயலாளர் சத்தியநாராயணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, மாணவர்களின் படைப்பாற்றலை பாராட்டினார்.

கடற்கரையோர மணல் சிற்பக்காட்சியை பெற்றோர்கள், பொதுமக்கள் பார்யவையிட்டு மாணவர்களின் திறமையை பாராட்டினர்.

Advertisement