சினி கடலை

அற்புதமான: பாலிவுட்டின் பிரபல இசை அமைப்பாளரும், பாடகருமான அஜய் கோகவாலே, முதன் முறையாக கன்னடத்தில் அறிமுகமாகிறார். இயக்குனர் சுகேஷ் ஷெட்டி இயக்கும் பீட்டர் என்ற படத்தில், ஒரு பாடலை பாடியுள்ளார்.
இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'பாலிவுட் பாடகர் அஜய் கோகவாலே, சமீபத்தில் பெங்களூரின் ஸ்டூடியோவுக்கு வந்து, பாடி கொடுத்தார். பாடல் அற்புதமாக வந்துள்ளது. படத்தில் ராஜேஷ் துருவா, ரவீக்ஷா ஷெட்டி, பிரதிமா நாயக் உட்பட, பலர் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது' என்றார்.
கணவர் இயக்கத்தில் மனைவி!
கன்னடத்தில் பல்வேறு தொடர்களில், தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜோதி ராய். தற்போது, 'கில்லர்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது தொடர்பாக, ஜோதி ராய் கூறுகையில், ''இது கிரைம், திரில்லர் கதை. இந்த படத்தை என் கணவர் பூர்வஜ் இயக்குகிறார். இப்படம் கன்னடம், தெலுங்கில் திரைக்கு வரவுள்ளது. இது தவிர, 'மாஸ்டர் பீஸ்' என்ற படத்திலும் நடிக்கிறேன். இதையும் என் கணவர் தான் இயக்குகிறார். மே மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதுவும் வித்தியாசமான கதை கொண்டது. படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது,'' என்றார்.
இரட்டை நாயகியர்!
நடிகர் கீர்த்திராஜ், 'ஐகீலா', 'அமராவதி போலீஸ் நிலையம்' உட்பட, சில படங்களில் நடித்துள்ளார். இவைகள் திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, 'சிந்துாரி' என்ற படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராகினி திரிவேதி நடித்துள்ளார்.
இது தொடர்பாக, கீர்த்திராஜ் கூறுகையில், ''இந்த படத்தில் நான் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். என் காதலியாக மற்றொரு நாயகியும் உள்ளார். அந்த நாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை. ஹாசனின், சக்லேஸ்புராவில், முழுமையான படப்பிடிப்பும் நடத்தப்படுகிறது. ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடிப்போம். இப்படங்களை தவிர 'நயன மதுரா' என்ற படத்திலும், நான் நடிக்கிறேன். இதனை இயக்குனர் புனித் இயக்குகிறார். மாறுபட்ட கதை கொண்டது,'' என்றார்.
டைட்டில் வெளியீடு
இயக்குநர் யோகராஜ்பட் திரைக்கதை எழுதி, இயக்கிய 'குலதல்லி மேல் யாவுதோ' படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. மே 23ம் தேதி மாநிலம் முழுதும் திரையிடப்படும். இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'மடநுர் மனு நாயகனாகவும், சின்னத்திரை நடிகை மவுனா குட்டமனே நாயகியாகவும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் சாலுமரதா திம்மக்கா, இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். இதில் தயாரிப்பாளர் சந்தோஷ், தபலா மணி, சோனல் மந்த்ரோ உட்பட, பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்' என்றார்.
மகனா... கணவரா?
நடிகர் யஷ் நடிக்கும், 'டாக்சிக்' திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என, உலக அளவில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே இவரது தாயார் புஷ்பா, தயாரிப்பாளராக மாறியுள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ''வாகன ஓட்டுநரின் மகன் யஷ், இன்று பெரிய ஸ்டார். இதில் என் சாதனை என்ன. நான் எப்போதும் தனித்தன்மையுடன் இருப்பதை விரும்புகிறேன். என் மகன் யஷ் இனி, சிறிய பட்ஜெட் படங்களில் நடிப்பாரா என்பது தெரியாது.
''புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க, தயாரிப்பாளராக திரையுலகுக்கு வந்துள்ளேன். நான் ஓட்டுநர் அருண்குமாரின் மனைவியாக வந்துள்ளேனே தவிர, யஷ்ஷின் தாயாக அல்ல. நான் தயாரிக்கும் முதல் படத்துக்கு, 'கொத்தலவாடி' என, பெயர் சூட்டியுள்ளோம். இதில் பிருத்வி அம்பர், காவ்யா ஷைவா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்,'' என்றார்.
புதிய சுதாராணி
ஒரு காலத்தில் கன்னட திரையுலகில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுதாராணி. பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தவர். இப்போதும் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதற்கிடையே குறும்படத்தில் நுழைந்துள்ளார். இது பற்றி, அவரிடம் கேட்ட போது, '' தற்போது திகில் கதையுள்ள 'கோஸ்ட் தி தெவ்வா' என்ற குறும்படத்தில் நடிக்கிறேன். படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது சைக்கலாஜிகல் திரில்லர் கதை. இதில் புதிய சுதாராணியை பார்ப்பீர்கள்,'' என்றார்.
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை