நிழலுலக தாதாக்கள் மிரட்டல் சபாநாயகர் காதர் தகவல்

பீதர்: ''நிழலுலக நபர்கள் உட்பட சில இடங்களில் இருந்து மிரட்டல் வந்தது. இதற்காக நான் பயப்படவில்லை,'' என சபாநாயகர் காதர் தெரிவித்தார்.
பீதரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இதற்கு முன் நிழலுலக தாதாக்கள் உட்பட சில அமைப்பிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்துள்ளது. எனக்காக மங்களூரில் என்.ஐ.ஏ., அமைக்க தேவையில்லை. மாவட்ட மக்களுக்காக அமைப்பதானால் அமைக்கட்டும்.
எங்கு, எப்போது பிறக்க வேண்டும், எப்போது இறக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது கடவுள். நம் தலையில் கடவுள் எழுதியுள்ளார். நிம்மதியாக சாகும் சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என, கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் விருப்பப்படி நடக்கட்டும். நம் கையில் எதுவும் இல்லை.
பஹல்காம் தாக்குதலை ஏற்கனவே பலரும் கண்டித்துள்ளனர். பயங்கரவாதிகளை கண்டுபிடித்து, கடுமையாக தண்டிக்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ளவர்களை, மத்திய அரசு ஒடுக்க வேண்டும். நாட்டு மக்களும் கூட, பிரதமர் நரேந்திர மோடியிடம் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் அமைதியை குலைப்பது, பயங்கரவாதிகளின் நோக்கமாகும். மத ஒற்றுமையை பாழாக்கி, நாட்டை பலவீனமாக்குவது அவர்களின் குறிக்கோளாகும். யுத்தம் நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பதை பிரதமரும், அனைத்து கட்சிகளும் முடிவு செய்ய வேண்டும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்யட்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் நண்பனாக நான் செயல்படுகிறேன். என் வாய்க்கு இப்போது பூட்டு போடப்பட்டுள்ளது. என் எல்லைக்குள் என்ன பேச முடியுமோ, அதை பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை