இன்று இனிதாக

ஆன்மிகம்

ஆதி சங்கரர் ஜெயந்தி

 ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா ஜெயந்தி மஹோத்சவத்தை ஒட்டி, குரு பிரார்த்தனை, கணபதி பூஜை - காலை 8:30 மணி; பஞ்சாமிர்த அபிஷேகம் - 9:30 மணி; ருத்ர ஹோமம் - 10:30 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மணி; பிரகார உத்சவம் - 12:30 மணி; பிரசாதம் வழங்கல் - 1:00 மணி இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

சித்திரை திருவாதிரை உத்சவம்

 ஸ்ரீராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்வசத்தை ஒட்டி, ராமானுஜருக்கு அபிஷேகம், மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 9:00 முதல் 10:30 மணி வரை; திவ்ய பிரபந்தம் சேவாகாலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், அன்னதானம் - மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீபான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ண மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

ராமானுஜர் ஜெயந்தி

 பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 7:30 மணி; திருப்பாவை, ராமானுஜர் 108 பாசுரம் -- 9:00 மணி; பிரசாதம் வழங்கல் - மதியம் 12:00 மணி. இடம்: பைல் ஆஞ்சநேயா கோவில், ஓல்டு மெட்ராஸ் சாலை, ஹலசூரு.

சங்கர பகவத்பாத ஜெயந்தி

 ஸ்ரீசங்கர ஜெயந்தி சபா சார்பில் 46ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ சங்கர பகவத்பாத ஜெயந்தி உத்சவத்தைஒட்டி, ருத்ராபிஷேகம், சோடசோப அர்ச்சனை பூஜை, சஹஸ்ரநாம அர்ச்சனை- காலை 9:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - 11:30 மணி; மாணவி தேஜாஸ்ரீயின் பரதநாட்டியம் - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை. இடம்: சமுதாய பவன், தெங்கனதோப்பு, மூன்றாவது குறுக்கு சாலை, சரஸ்வதிபுரம், மைசூரு.

 மாவட்ட நிர்வாகம் சார்பில் சங்கராச்சார்யா ஜெயந்தி விழாவை ஒட்டி, இசை நிகழ்ச்சி - காலை 10:00 மணி. இடம்: கலாமந்திரா வளாகம், மைசூரு.

ஆண்டு விழா

 தேவாலயம் ஆண்டு விழாவை ஒட்டி, ஆங்கில திருப்பலி - காலை 7:00 மணி; கன்னட திருப்பலி - மாலை 6:00 மணி; தமிழில் திருப்பலி - இரவு 7:00 மணி. இடம்: புனித சூசையப்பர் தேவாலயம் லிங்கராஜபுரம், பெங்களூரு.

பொது

புத்தக கண்காட்சி

 புத்தக பிரியர்களுக்கான புத்தக கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: நெக்சாஸ் வேகா சிட்டி மால், இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சர்க்கஸ்

 குழந்தைகளை மகிழ்விக்கும் ஒலிம்பியன் சர்க்கஸ் - மாலை 4:30 முதல் 6:20 மணி வரை மற்றும் இரவு 7:30 முதல் 9:10 மணி வரை. இடம்: சவுடய்யா மெம்மோரியல் ஹால், 16வது குறுக்கு சாலை, வயாலிகாவல், மல்லேஸ்வரம்.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

குறும்படம்

 திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை

 பிரைடே பிஸ்டா - இரவு 9:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கின்சா கிளப், 27, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 பஞ்சாப் ஸ்வாப் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: வேப்பர் பப், 773, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், ஹெச்.ஏ.எல்., இந்திரா நகர்.

 லால்கரா பாண்ட் நேரடி இசை ஒளிபரப்பு - இரவு 8:30 முதல் 11:30 மணி வரை. இடம்: டிப்சி புள், 13/4, ஹூடி பிரதான சாலை, ஒயிட்பீல்டு.

 பிளாசி பிரைடே - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பிளர்டு, 45, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

 ஒன் நைட் இன் டோக்கியோ - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபமைன், 36, 45, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

 பிரைடே கல்ச்சர் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியு பார் கிட்சன், 40, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

 காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், ஏழாவது பிராதன சாலை, கல்யாண் நகர்.

 தி பன்னி லைன்அப் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 கிரவுண்டெட் காமெடி நைட் - இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

Advertisement