கார் டயர் வெடித்து விபத்து 3 தமிழர்கள் உயிரிழப்பு

சித்ரதுர்கா: சாலையில் சென்ற இன்னோவா காரின் டயர் வெடித்ததில், விபத்து ஏற்பட்டு தமிழகத்தின் மூவர் உயிரிழந்தனர்.

தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினர், டொயோட்டா இன்னோவா காரில் கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டனர். நேற்று காலை, கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா தாலுகாவின், சீபாரா அருகில் தேசிய நெடுஞ்சாலை - 4ல், கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை டிவைடரில் மோதி, பக்கத்து சாலையில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் பயணித்த அர்ஜுன், 35, சரண், 28, ஸ்ரீதர், 28, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அர்ஜுன், கிருஷ்ணகிரியில் போலீஸ் நிலையம் ஒன்றில் ஏட்டாக பணியாற்றுபவர். மற்ற ஐந்து பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சித்ரதுர்கா ஊரக போலீசார், இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தினர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். எஸ்.பி., ரஞ்சித்குமார் பன்டாரு, டி.எஸ்.பி., தினகர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

'இன்னோவா கார், சாலை டிவைடரை உடைத்து கொண்டு, பக்கத்து சாலைக்கு பாய்ந்த போது, அதிர்ஷ்டவசமாக எதிரே வாகனம் ஏதும் வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால், உயிர்ச்சேதம் அதிகம் இருந்திருக்கும்' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement