விடுமுறை அளிக்காத 109 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர்: விருதுநகரில் மே தினத்தன்று சட்டவிரோதமாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை பற்றிய தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வியின் செய்திக்குறிப்பு: தொழிலாளர் தினத்தன்று சட்ட விதிகளை மதிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 61 கடை, நிறுவனங்கள், 43 உணவு நிறுவனங்கள், 5 போக்குவரத்து நிறுவனங்கள் என 109 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிலாளர் தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை, கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் 1098 கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement