விளை நிலங்களில் காரிப் பருவ டிஜிட்டல் கிராப் சர்வே துவக்கம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் காரிப் பருவ டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் துவங்கியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை தாலுகா உள்ளது. இத்தாலுகாவில் உள்ள 61 வருவாய் கிராமங்களில் டிஜிட்டல் பயிர் சர்வே எடுக்கும் பணிகள் கடந்த ஆண்டு நவ.,ல் நடந்தது. தற்போது காரிப் பருவ சர்வே பணி துவங்கியுள்ளது. இது குறித்து திருவாடானை வேளாண் உதவி இயக்குநர் தினேஸ்வரி கூறியதாவது:

தாலுகாவில் காரிப் பருவத்தில் நிலங்களில் என்ன பயிர் சாகுபடி செய்யபட்டுள்ளது என்பதை நேரில் பார்த்து சர்வே எடுக்கும் பணிகள் ஏப்.,24 முதல் துவங்கியது. இப்பணிகள் மே 15 ல் முடிவடையும். இப்பணிகளில் வேளாண் அலுவலர்களுடன் இல்லம் தேடி கல்வி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அலைபேசி செயலி மூலம் விளை நிலங்களில் ஜி.பி.எஸ்., மூலம் செயல்படுத்தப்படும். குறிப்பிட்ட நிலங்களில் விவசாயிகள் என்ன பயிர் செய்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.

Advertisement