கடலாடி தாலுகாவிற்கும் உள்ளூர் விடுமுறை தேவை பக்தர்கள் கோரிக்கை

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் வருண பகவானால் பூஜிக்கப்பட்ட பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவன் கோயில் உள்ளது.

இங்கு சித்ரா பவுர்ணமி அன்று திருக்கல்யாண உற்ஸவம், மாரியூர் மன்னார் வளைகுடா கடலுக்குள் சிவபெருமான் வேடம் அணிந்து நாட்டுப் படகில் சென்று வலை வீசும் திருவிளையாடல் காட்சியும் நிகழ்த்திக் காண்பிக்கப்படுகிறது.

இவ்விழாவில் பங்கேற்க கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்கின்றனர்.

பக்தர்கள் கூறியதாவது: மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் வலை வீசும் படலம், திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. மே 12ல் கடலாடி தாலுகாவை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.

பரமக்குடியில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் உள்ளூர் விடுமுறை அளித்ததை போன்று கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட மாரியூர் வலை வீசும் படலம் நிகழ்விற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பதற்கு பயனுள்ளதாக அமையும் என கோரிக்கை விடுத்தனர்.

Advertisement