குழாய் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்

திருவாடானை: திருவாடானை-திருவெற்றியூர் ரோட்டில் ஆதியூர் அருகே குழாய் உடைந்து ரோட்டில் தண்ணீர் ஓடுவதால் கிராமங்களில் குடிநீர் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

ஆதியூர் மக்கள் கூறியதாவது: திருவாடானையில் இருந்து ஆதியூர், அரும்பூர் வழியாக திருவெற்றியூர் மற்றும் கிராமங்களுக்கு காவிரி நீர் செல்கிறது. தரமில்லாத குழாய்கள் பதிக்காததால் அடிக்கடி குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. ஆதியூர் அருகே இரு நாட்களாக குழாய் உடைந்து ரோட்டில் தண்ணீர் ஓடுகிறது.

இதனால் திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement