மினி பார் ஆன பெரிய கண்மாய் தென்கலுங்கு கரைப்பகுதி போலீஸ் நடவடிக்கை அவசியம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே லாந்தையில் உள்ள பெரிய கண்மாய் தென் கலுங்கு ஷட்டர், கரையில் அமர்ந்து சமூக விரோதிகள் கஞ்சா, மது அருந்துவதற்கு பயன்படுத்துகின்றனர். போலீசார் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் அருகே லாந்தையில் மதுரை ரோட்டோரத்தில் பெரிய கண்மாய் தென்கலுங்கு வாய்க்கால், மதகு ஷட்டர் உடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் உள்ளதால் ஷட்டரில் இருந்து வாய்க்காலில் வெளியேறும் தண்ணீரில் பெண்கள் குளிக்க, துவைக்க பயன்படுத்துகின்றனர்.

ஷட்டர் பகுதியில் சில சமூக விரோதிகள் கஞ்சா, மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளனர். தென்கலுங்கு ஷட்டர் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாக பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர். மது பாட்டில்களை உடைந்து சிதறி கிடக்கின்றன. எனவே பெரிய கண்மாய் ஷட்டர் பகுதி, கரையில் அமர்ந்து கஞ்சா, மது அருந்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.

Advertisement