ரேஷன் கடை திறக்கப்படுமா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி அண்ணா நகர் செல்லும் வழியில் 30 ஆண்டுகள் பழைய கட்டடத்தில் ரேஷன் கடை இருந்தது. அடிக்கடி சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்ததால் புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக புதிய ரேஷன் கடை கட்டடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரூ.11.42 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

திருப்புல்லாணி யூனியன் மூலமாக கட்டப்பட்ட இக்கட்டடம் இதுவரை ராம்கோ கூட்டுறவு விற்பனை பிரிவில் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:

ரேஷன் கடை ரெகுநாதபுரம் கீழவலசையில் உள்ள தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதன் அருகில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற வேண்டும் என்றனர்.

Advertisement