மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாணம் மே 8ம் தேதி,தேரோட்டம் மே 9ம் தேதி நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கும், சுவாமிகளுக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்காரங்களுடன் கொடி மரத்திற்கு முன் எழுந்தருளினர்.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு பூஜைகளை செய்த பிறகு காலை 8:10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அபிஷேக, ஆராதனைகளும் நடந்தது.
விழா நாட்களில் அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்னர் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வருவர்.
திருக்கல்யாணம் வருகிற மே 8ம் தேதி,தேரோட்டம் மே 9ம் தேதி நடைபெற உள்ளது.
மேலும்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி