செயல் அலுவலர் இல்லாத பேரூராட்சி

இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ் மற்றும் பிளான் அப்ரூவல் தாமதமாகிறது.

மேலும் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை ஆங்காங்கே தீயிட்டு கொளுத்துவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்ட பணிகளால் சேதமடைந்த ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் துல்கருணை சேட், நகர தலைவர் ஜலாலுதீன், செயலாளர் அகமது ஜலால், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சையது இப்ராகிம் ஆகியோர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

மேலும் இந்த பேரூராட்சிக்கு கூடுதல் பொறுப்பாக இல்லாமல் நிரந்தரமாக செயல் அலுவலர் நியமிக்க கோரியுள்ளனர்.

Advertisement