பன்றி தொல்லையை தவிர்க்க காவல் காக்கும் விவசாயிகள்
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் விவசாயத்தை பாழாக்கும் பன்றிகளை விரட்ட பரண் அமைத்து விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு, கத்தரி உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் நடந்து வருகின்றன. விவசாய நிலங்களை ஒட்டிய கண்மாய் கருவேல மர காடுகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக தங்கி விவசாயத்தை பாழாக்கி வருகின்றன.
பன்றிகளை விரட்ட விவசாயிகள் பரண் அமைத்து இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர். விவசாயத்தை பாழாக்கும் பன்றிகள் குறித்து வனத்துறை, விவசாயிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழு ஆய்வு செய்து சென்னை வண்டலுார் வன உயிரின ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆராய்ச்சியின் முடிவில் விவசாயத்தை பாழாக்குவது காட்டுப்பன்றிகள் இல்லை என தெரிவித்ததையடுத்து தாலுகா வாரியாக குழுக்கள் அமைத்து பன்றிகளை அப்புறப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் திருப்புவனம் வட்டடாரத்தில் மட்டும் இதுவரை ஆலோசனை கூட்டம் நடத்தப்படவே இல்லை. தற்போது கோடையில் விவசாயிகள் கத்தரி உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக இரை தேடி வரும் பன்றிகள் கத்தரி செடிகளை வேருடன் பிடுங்கி போட்டு விடுகிறது.
பன்றிகளால் விவசாய சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் நிலையில் பன்றிகள் பற்றிய ஆய்வு முடிவு வந்த பின்னும் இன்னமும் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு