மே தின விழா கொண்டாட்டம்  

சிவகங்கை: சிவகங்கையில் மே தினத்தை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர் நல சங்கம், சிவில் இன்ஜி., சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன், நகராட்சி தலைவர் துரைஆனந்த், மேலாளர் கார்த்திகை குமார், அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜா, நகராட்சி கவுன்சிலர் ஜெயகாந்தன், சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பாரதிதாசன், சுந்தரமாணிக்கம், கட்டுமான தொழிலாளர் நல வாரிய சங்க நிர்வாகிகள் ரவி, ராதா கிருஷ்ணன், சரவண முத்து, காளீஸ்வரன், மதியழகன், சட்ட ஆலோசகர்கள் நேரு, பிரதீபா பங்கேற்றனர். மருத்துவ முகாமில் 126 பேர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். கட்டட தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை, பாத்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மே தினத்தை முன்னிட்டு சிவகங்கை டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன், இந்திய கம்யூ., நிர்வாகி கிருஷ்ணன் கொடியேற்றினார்.

வழக்கறிஞர் மருது, சகாயம், பாண்டி, தாளைமுத்து, ரவி, குஞ்சரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேவகோட்டை வட்ட வ.உ.சி. பேரவை சார்பில் தியாகிகள் பூங்காவில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வ.உ.சி., படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. வ.உ.சி. பேரவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். புரவலர் முருகேசன், பொருளாளர் ஜானகிராமன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ்ரூசோ, முன்னாள் மாவட்ட அரசு வக்கீல் ராமநாதன், டாக்டர் ஜெயக்குமார், வக்கீல் கணேசன், இந்திய கம்யூ. காமராஜ், வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா, ஏ.ஐ.யு.டி.சி. தென் மண்டல செயலாளர் மீனாள், காங் தலைவர் சஞ்சய் பங்கேற்றனர். ஆட்டோ ஓட்டுனர், தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.

Advertisement