பூச்சாண்டி காட்ட போர் ஒத்திகை நடத்திய பாகிஸ்தான்

10

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர், சிறிது நாளாக வெளியே தலைகாட்டவில்லை. இவர் பதுங்குக்குழிக்குள் இருப்பதாகவும், குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இவர் மாயமாகிவிட்டார் என கூறப்பட்ட நிலையில் நேற்று பாக்., ராணுவ தலைமையகம், இவர் இந்திய - பாக்., எல்லையில் உள்ள ஜீலம் மாவட்டத்தில் நடக்கும் போர் ஒத்திகை நிகழ்ச்சில் ராணுவ வீரர்களுடன் இருப்பதாக புகைப்படம் வெளியிட்டுள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான் எல்லைகள் உட்பட மூன்று இடங்களில், பாகிஸ்தான் தரைப்படை மற்றும் விமானப்படை போர் ஒத்திகை நடத்துவது குறித்த படங்களையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
Latest Tamil News
தங்களிடம் எப்., 16, ஜெ. 10, ஜெ.எப்., 17 ரக போர் விமானங்கள் இருப்பதாகவும், பாக்., தம்பட்டம் அடித்துள்ளது. பாகிஸ்தானின் செயல்பாடுகளை பார்த்தால், இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டி, போரை 'யாசகமாக' பெறுவது போல் தோன்றுகிறது.

Advertisement