அதிக ஒலி எழுப்பிய ஹாரன்கள் அகற்றம்

காரைக்குடி: காரைக்குடியில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் பைப் ஹாரனை போலீசார் அகற்றினர்.

காரைக்குடியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பக் கூடிய பைப் ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்தன. நேற்று காலை காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையில் சோதனை செய்யப்பட்டது.

5க்கும் மேற்பட்ட பஸ்களில் இருந்த பைப் ஹாரன் அகற்றப்பட்டது. விதிமுறைகளை மீறி பைப் ஹாரனை பயன்படுத்தினால் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

Advertisement