தனியார் பங்களிப்புடன் கண்மாய்கள் மேம்பாடு

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் தொழிலாளர் தினத்தை யொட்டி கிராம சபா கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தற்போது இப்பகுதியில் பாயும் பாலாறு,சருகனி மற்றும் விருசுழியாறுகளை துார்வாரும் பணி தனியார் பங்களிப்புடன் நடந்து வருகிறது. இதன் மூலம் வரும் கூடுதல் வெள்ள நீரை சேமிக்க கண்மாய் பராமரிப்பிற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நமது மாவட்டம் ஏரிகள்,குளங்கள் அதிகமாக உள்ள பகுதி. அரசின் உள்ளாட்சித்துறை மூலம் 442 கண்மாய்கள் பராமரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இங்கு கூடுதலாக தனியார் பங்களிப்புடன் 20 கண்மாய்கள் மேம்படுத்தப்படும். கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Advertisement