மாணவி பலி

சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே குளிக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி மாணவி பலியானார்.

கல்லங்களபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், விவசாயி. இவரது மகள்கள் திவ்யா 13, சிவரஞ்சனி 10, மகன் தருண் 7 உள்ளிட்ட ஐந்து பேர் அருகே உள்ள பம்பு செட்டுக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது மின் மோட்டாரில் இருந்து தண்ணீரில் மின்சாரம் கசிந்துள்ளது. இதில் சிவரஞ்சனியை மின்சாரம் தாக்கியது. இதை கவனித்த திவ்யா, தங்கையை காப்பாற்ற சென்றுள்ளார். திவ்யா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சிவரஞ்சனி உள்ளிட்ட மற்ற 4 பேரும் தப்பினர்.

Advertisement