கட்டாய ஓய்வில் இருந்த போலீஸ்காரர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கட்டாய ஓய்வில் இருந்த போலீஸ்காரர் காளிராஜ் 37, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சொக்கலாம்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் காளிராஜ் . இவர் 2009 ல் போலீசில் சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் சப் டிவிஷனில் பல்வேறு ஸ்டேஷன்களில் பணியாற்றினார். உடல்நிலை சரியின்றி வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் கட்டாய ஓய்விற்கு ஆளாகினார். இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement