சூறைக்காற்றில் வாழைகள் நாசம்

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் மண்வயல் ஓடக்கொல்லி பகுதியில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீசிய சூறைக்காற்றில், சிறு விவசாயிகள் பயிரிட்டு இருந்த, 1,000க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. அப்பகுதியில், தோட்டக்கலை துறை உதவி தோட்டக்கலை அலுவலர் பிரபாகரன் ஆய்வு செய்தார்.

விவசாயிகள் கூறுகையில், 'சூறைக் காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடு செய்ய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement