'ஓசி சரக்கு' கேட்டதால் வி.சி., நிர்வாகி கொலை; 2 பேர் கைது

வேலுார்:வேலுார் அடுத்த அரியூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சரத்குமார், 34; வி.சி., தொழிலாளர் முன்னணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். ஏப்., 28ம் தேதி இரவு சரத்குமார் தலை, முகம், கால்கள் மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். பாகாயம் போலீசார் விசாரித்தனர்.

சரத்குமாரை கொலை செய்தது, அரியூரைச் சேர்ந்த டேவிட்ராஜ், 30, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சிவா, 50, என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'அரியூர் டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்கச் சென்ற சரத்குமார், டேவிட்ராஜிடம் பணம் கேட்டுள்ளார். ஓசியில் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

'டேவிட்ராஜ் மறுத்ததால், அவரை சரத்குமார் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த டேவிட்ராஜ் தன் நண்பர் சிவாவுடன் சேர்ந்து சரத்குமாரை கற்கள் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்துள்ளார். அவர்களை கைது செய்துள்ளோம்' என்றனர்.

Advertisement